Saturday 8 September 2012

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது : பிரதமர் வாழ்த்து



இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தயாரித்து விண்ணில் செலுத்திய 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார் பிரதமர் மன்மோகன் சிங். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்
ஆய்வில் மைல் கல் எனப்படும் இந்தத் திட்டத்தில், இஸ்ரோவின் 100வது ராக்கெட் பிஎஸ்.எல்.வி சி21 ராக்கெட் இன்று காலை 9.51க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
                     
இதில் இந்திய செயற்கைக்கோள்களுடன் பிரான்ஸ் நாட்டு செயற்கைக் கோளும் சேர்ந்து ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நோக்கில் செயற்கைக் கோள்களை ஏவும் இஸ்ரோவின் முயற்சிக்கு அங்கீகாரம் மேலும் கூடியுள்ளது.
                  
இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிடுவதற்காக பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்திருந்தார். ராக்கெட் ஏவப்பட்டு சில நிமிடங்களில் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளைப் பரிமாறினார்.
               
பின்னர் அவர் கூறும்போது, நம் தடைக்கற்களை தகர்த்து விண்வெளித்துறையில் நாம் சாதிப்பதை இது காட்டுகிறது. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் என்றார்
.

No comments:

Post a Comment