Wednesday 12 September 2012

ஆசிரியர் தகுதி தேர்வை கைவிட வேண்டும் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை



         ஆசிரியர் பணி அளித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை கைவிட கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் செஞ்சி வட்டார வள மையத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாநில
பொரு ளா ளர் பக்தவச்சலம், மாநில செயலாளர் தண்டபாணி சிறப்புரை நிகழ்த்தினர்.இதில் தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, முறையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2004-05ம் கல்வியாண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்து 20 ஆண்டுகள் பணி முடிந்த ஆசிரியர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளை இரண்டு அலகாக பிரித்து மேல்நிலை, உயர்நிலை என இரண்டு தலைமையாசிரியர் பணியிடங்களை தோற்று விக்க வேண்டும். ஆசிரியர் பணி அளித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.இதில் மாவட்ட தலைவராக தங்கராஜி, பொரு ளா ளராக ரவிச்சந்திரன், இணை செயலாளராக பாலு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment