Saturday 19 January 2013

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் முறைகேடு ஆசிரியர் கூட்டணி சார்பில் 30ல் ஆர்ப்பாட்டம்



               கிருஷ்ணகிரி மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும், 30ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 10 யூனியன்களிலும், உதவி தொடக்க
கல்வி அலுவலகங்கள் உள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பள பட்டியல் உள்ளிட்ட அனைத்து நிதி சேவைகளையும், உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய வருங்கால வைப்பு நிதி, தேர்வு நிலை ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், உயர்கல்வி ஊதியம் போன்றவையும், இந்த அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறதுஅரசு பள்ளி ஆசிரியர்களுக்காக, மாதந்தோறும், முதல் சனிக்கிழமை அன்று ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும், குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து, அவற்றை தீர்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
              சில மாதங்களாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், மாதந்தோறும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்யப்படுகிறது. மேலும், ஊக்க ஊதியம், தேர்வு நிலை ஊதியம், சரண்டர் போன்றவை கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்தால் தான், அந்த தொகையை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, ஆசிரியர்களின் குறைகள் குறித்த விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு தவறான தகவல்களை கொடுத்து வருவதால், ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவாதிக்க, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரியில் நடந்தது. வட்டார தலைவி மரியசாந்தி தலைமை வகித்தார். தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாவட்ட தலைவர் பழனிசாமி உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்துப் பேசினார்.
                              "
அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலுவை பணிகளை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவோர் உள் நோக்கத்துடன் காலதாமதம் செய்வது, உதவி தொடக்க கல்வி அலுவலக பணியாளர்கள் கருவூலத்துக்கு செல்லாமல் ஒரு சில ஆசிரியர்களை இடைத்தரகர்களாக வைத்துக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவது போன்றவற்றை கண்டித்து, வரும், 30ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
.

No comments:

Post a Comment