சேலத்தில், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்டத்
தலைவர் பெரியசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பின்றி தவித்த எங்களுக்கு, தமிழக அரசு வேலை வாய்ப்பை தந்து, மாதந்தோறும், 5,000 ரூபாய் சம்பளம் அறிவித்துள்ளது. இதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டு கூட்டம் நடத்தவுள்ளோம். செயற்குழு கூட்டத்தில், அரசை பாராட்டி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உடற்கல்வி, இசை வகுப்பு, தையல், கம்ப்யூட்டர், தொழிற்கல்வி போன்ற வகுப்புகளில் பாடம் நடத்தி வருகிறோம். சேலம் மாவட்டத்தில், 763 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களின் மாத சம்பளத்தை அவர்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களின் பணி சிறக்க, முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பகுதி நேர ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment