Thursday 17 January 2013

காரமடை பள்ளி மாணவ, மாணவியர் உலக சாதனை



                       காரமடையில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பானைகளை பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய திருவள்ளுவர் சிலையை உருவாக்கி, உலக சாதனை படைத்தனர். கோவை மாவட்டம் காரமடையிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில், 1,330 மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், ஒரு திருக்குறளை மூன்று பானைகளில்
எழுதி, அந்த பானைகளை வரிசையாக அடுக்கி, 133 அடி நீளத்துக்கு திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கினர். உலக சாதனைக்கான இம்முயற்சிக்கு, ஐந்து மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை 9.00 மணிக்கு துவங்கி, 9.40க்குள்ளாகவே, உலகின் மிகப்பெரிய திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கி மாணவ, மாணவியர் அசத்தினர். இதை லண்டனை சேர்ந்த எலைட் உலக சாதனை நிறுவனத்தின் இந்திய கள ஆய்வாளர் லிடியா காடின், சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் தீர்ப்பாளர் மெக்கேல் தாமஸ், மும்பை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி சாதனைகள் பதிவாளர் வாசுதேவன் மற்றும் சென்னை தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தீர்ப்பாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் ஆய்வு செய்து சான்று வழங்கினர்.

No comments:

Post a Comment