Tuesday 15 January 2013

தரமற்ற பள்ளிச்சீருடை: அரசு பணம் விரயத்திற்கு யார் காரணம்?



            நீலகிரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் வண்ணச் சீருடைகள் அவசர கதியில் தைத்து வழங்கப்படுவதால், பயன்படுத்த முடியாமல், அலங்கோல நிலையில் உள்ளன. இதனால், அரசுப் பணம் விரயமாகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவ-மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுக்கு 4 ஜோடி, வண்ண சீருடை வழங்கப்படுகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கும் இலவச வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன், கடைசி ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பேன்ட், சர்ட் ஆகியவை, மிக மோசமாக தைக்கப்பட்டிருந்தன. தைக்கப்பட்ட பல சீருடைகள் கிழிந்தும், அளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தன. ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கல்வி துறை மூலம் வழங்கப்பட்ட சீருடை, மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை கால் பேன்ட் வழங்கப்படுகிறது. குளிர் பிரதேசமான நீலகிரியில், 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட முழுக்கால் சட்டை அணிந்து தான் பள்ளிக்கு வருகின்றனர். இதனால், அரசு வழங்கும் சீருடையை பயன்படுத்த தயங்குகின்றனர்.
                               
கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். ஒருவேளை, அமைச்சர்கள் யாராவது பள்ளிகளில் சீருடை வழங்கப்பட்டு விட்டதா, என ஆய்வு நடத்தலாம் என்று கருதி, சீருடைகள் அவசர கதியில் தைக்கப்பட்டு, மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டிருக்கலாம். பயன்படுத்த தகுதியற்ற நிலையில் சீருடைகள் வழங்கப்படுவதால், அரசு பணம் தான் விரயமாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment