Friday 18 January 2013

அரசு கல்லூரிகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்



            அரசு கல்லூரிகளில் பயிலும், ஆதிதிராவிட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்க, 20 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு,
ஆங்கிலம், கணிதம், அறிவியல் திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகளை, அரசு அளிக்கிறது. மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க, கடலூர் பெரியார் கலை கல்லூரி, மன்னார்குடி அரசு கலை கல்லூரி, அரியலூர் அரசு கலை கல்லூரி, சிவகங்கை அரசு ஆடவர் கலை கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளிட்ட, 20 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
                        கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, பயிற்சியாளர்களை நியமிக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும், ஆண்டிற்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்சிக்கு, சுழற்சி முறையில் கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தாண்டு, 20 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடக்கிறது. 100 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9,907 மாணவர்கள், இந்தாண்டு பயனடைவர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment