Friday 8 February 2013

பிளஸ்1, பிளஸ் 2 புதிய வரைவு பாடதிட்டம் : இணைய தளத்தில் 13ம்தேதி வெளியீடு



                           பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் தயாராகி விட்டது. இவை வரும் 13ம்தேதி இணைய தளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றி, அந்தந்த கால கட்டத்திற்கு
ஏற்றாற்போல், புதிய பாடத்திட் டங்கள் அறிமுகப்படுத்துவது வழக்கம். தற்போது உள்ள பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு பாடத்திட்டங்கள் அறிமுகமாகி 6 ஆண்டுகள் ஆகின்றனஇதில் வரலாறு, அறிவியல், தொழில்துறை, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் ஏற்பட் டுள்ள மாற்றங்களின் அடிப்படை யில், புதிய பாடத்திட்டம் உருவாக்க மாநில கல்வி யியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
                           இதற்காக பாட வாரியாக கடந்த ஆண்டு தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 6 பேர் இடம் பெற்று இருந்தனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள்,  ‘’பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில், 24 பாடங்களுக்கு தற்காலிகமாக வரைவு பாடத்திட்டம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இது வரும் 13ம்தேதி மாநில கல்வி யியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறதுபின்னர் பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரைவு பாட திட்டத்தை இறுதி செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்படும். அடுத்த கல்வி ஆண்டில் (2014&15) பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015&16) பிளஸ்2 வகுப்புக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்’’என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment