Tuesday 12 February 2013

சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் 67 பேர் மீண்டும் பணியில் சேர்ப்பு



                      நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் சிக்கிய 67 தலைமை ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றி பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுகாதாரக் குறைவான தொழில்புரியும் பெற்றோரின்
குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதுநாமக்கல் மாவட்டத்தில் 2010, 2011ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.81 லட்சம் வரை மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் நடத்திய ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
              இதையடுத்து, கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த 4 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 77 தலைமை ஆசிரியர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தினர். 3 பேர் மீது எப்..ஆர். பதிவு செய்யப்பட்டது. மோசடி குறித்து, பெற்றோர்கள், குழந்தைகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப் பட்டு 6 மாதத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு புதிய தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. ஆசிரியர் சங்கங் களின் கோரிக்கையை தொடர்ந்து,
                                  
அவர்கள் பற்றி முடிவு எடுக்க அரசு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவியுடன் தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர் முருகன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 67 பேரை மட்டும் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள முடிவானது. இதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் நேரில் வழங்கப்பட்டது. இவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிக்கு பதில் அருகாமையில், அதே ஒன்றியத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
                               
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறுகையில், ‘இவர்கள் மீது விரைவில் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் அவர்கள் பணியாற்ற வேண்டும் என தொடக்ககல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்'' என தெரிவித்தார்
.

No comments:

Post a Comment