Friday 8 February 2013

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இலவச விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் துவக்கம்



         கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் இன்று முதல் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் நரிமேடு, திருப்பரங்குன்றம் ஆகிய இரு இடங்களில் கே ந்திரிய வித்யாலயா பள்ளிகள்
இயங்குகின்றன. இங்கு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 10ம் தேதிக் குள் ஒப்படைக்க வேண்டும். தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பட்டியல் மார்ச் 20ல் வெளியிடப் படும். இதன்பின்பு சேர்க் கை முடிந்து ஏப்ரல் முதல் தேதி வகுப்புகள் துவங்குகிறது.
                     இதுகுறித்து நரிமேடு கேந்திரிய வித்யாலயா முதல்வர் முத்தையா கூறியதாவது: ஒன்றாம் வகுப்பில் 160 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதில் 25 சத வீதம் பேர் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை யில் தேர்வு செய்யப்படுகின்றனர். எஞ்சிய 120 இடங்களு க்கு மத்திய அரசு பணியாளர்கள், ராணுவம், முன் னாள் ராணுவத்தினர், பொ துத்துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்கள், மாநில பொதுத்துறை நிறு வன ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு 5 பிரிவுகளின் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன் றாம் வகுப்பில் சேர 2013 மார்ச் 31ம் தேதி அன்று 5 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 2008 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண் டும். வயது வரம்பில் சலு¬ ககள் இல்லை என்றார்.

No comments:

Post a Comment