Monday 4 February 2013

பருவநிலை மாற்றத்தை மாணவர் அறிய புதிய கையேடு



             பள்ளி மாணவர்கள், பருவநிலை மாற்றம் குறித்து அறிவதற்கு, உலக இயற்கை நிதியம், ஆசிரியர்களுக்கான புதிய கையேடு தயாரித்துள்ளது. இதில், எளிய வகையில், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்முறை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உலக இயற்கை
நிதியத்தின் தமிழக கிளை, பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், "காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல்" என்ற தலைப்பில், சிறப்பு கையேட்டை தயாரித்துள்ளதுஇதில், வினாடி-வினா, கோடிட்ட இடங்களை நிரப்புக, வார்த்தை விளையாட்டு, பொருத்துக, குறுநாடகம் போன்றவற்றின் மூலம், பருவநிலை குறித்து, மாணவர்கள் அறியும் வகையில், செய்முறை பயிற்சிகள் அடங்கி உள்ளன.மேலும், ஓவியங்கள், தகவல்கள், புள்ளி விவரங்கள் போன்றவற்றின் மூலம், எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
                           இதுகுறித்து, உலக இயற்கை நிதியத்தின் இந்திய அறங்காவலர், தியோடர் பாஸ்கரன் கூறியதாவது: பருவநிலை அடிக்கடி மாறுவதால், பருவமழை பொய்த்து போகிறது. எனவே, பூமியின் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமான பருவநிலை மாற்றம் குறித்து, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே, புத்தகம் வெளியிட்டுள்ளோம். பருவநிலை மாற்றம் குறித்து, இளம் வயது மாணவர்களுக்கு கற்பித்தால், பிற்காலத்தில் பெரும் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு, பள்ளி பாடத்திட்டத்தில், இப்புத்தகத்தை சேர்ப்பதற்கு பரிசீலிக்க வேண்டும்; அல்லது பருவநிலை குறித்த புத்தகம் தயாரித்து, சிறப்பு பாடமாக, சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment