Wednesday 13 February 2013

பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங்



         வரும் கல்வியாண்டு முதல் எம்./ எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுதமிழகத்தில் 11 பல்கலைகள் உள்ளன. இவற்றில் 62 அரசு கல்லுõரிகள், 132 உதவி பெறும் கல்லுõரிகள், 500க்கும்
மேற்பட்ட சுயநிதி கல்லுõரிகள், இணைப்பு பெற்று செயல்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் படிப்புகள் ஒரே பல்கலைகளின் கீழ் இணைப்பு பெற்றுள்ளதால் மாணவர் சேர்க்கை மாநில அளவில் ஒரே கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. அது போன்று எம்./எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது.
                        இதுகுறித்து அக்கூட்டத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கூறுகையில், கலைஅறிவியல் கல்லுõரிகளில் உள்ள எம்./எம்.எஸ்சி., போன்ற முதுகலை படிப்புகளுக்கு அக்கல்லுõரி இடம்பெற்ற பல்கலையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். தொடர்ந்து பி./பி.எஸ்சி., போன்ற இளங்கலை படிப்புகளுக்களுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. இப்புதியமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றார்.

No comments:

Post a Comment