தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர்
சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். அமைப்பாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பாலகுருநாதன், தமிழாசிரியர் கழக மாநில துணைச் செயலாளர் இளங்கோ, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, ஆங்கில மொழியாசிரியர் கழக பொதுச் செயலாளர் ஆரோக்கியதாஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் குமரேசன் உட்பட பலர் பேசினர்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வட்டார பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment