Friday, 1 March 2013

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம், மக்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு



             அரசுப்பள்ளிகளில், கல்விக்கானஅனைத்து தேவைகளையும் அரசுஇலவசமாக வழங்க உள்ளது குறித்துமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அரசு தொடக்கப்பள்ளிகளில்,
செயல்வழி கற்றல் முறையும், நடுநிலைப்பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ கல்விமுறையும் நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரும், டிவி மற்றும் டிவிடியும், பள்ளிகல்வித்துறை சார்பில், லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், அரசுபள்ளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் வசதி,சீருடையில் மாற்றம் போன்றவற்றினால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.அரசுப்பள்ளிகளில், போதுமான வசதிகளை மேம்படுத்தவும், மாற்றங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கல்வியாளர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
               இந்நிலையில், தமிழக அரசு 2012-13ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ததுடன், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.அதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், புத்தகங்கள் முதல் காலணி வரை அனைத்தும் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திபள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெற்றோருக்கு சுமையில்லாமல், அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில்விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
             மேலும், பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பிளக்ஸ் போர்டுகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், அரசின் திட்டங்கள், பள்ளியின் செயல்பாடுகள், இலவச கட்டாய உரிமைச் சட்டம், பள்ளிகளிலுள்ள வசதிகள் உள்ளிட்டவை விளக்கமாக தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment