Thursday 20 June 2013

பிளஸ்–2 தேர்வு முடிவு: "கட்டணம் செலுத்தாத மாணவிக்கு, மறு மதிப்பீடு செய்தது தவறு" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பிளஸ்–2 மறுமதிப்பீட்டுக்கு ஆன் லைனில் விண்ணப்பம்  அனுப்பி  விட்டுகட்டணம் செலுத்தாதத மாணவிக்கு மறு மதிப்பீடு செய்தது தவறு என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்
கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்
இவர்,மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:எனது மகள் சுசித்ராநடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில்இயற்பியலில் 191  மதிப்பெண்ணும் வேதியியலில் 199 மதிப்பெண்ணும்,உயிரியியலில் 197 மதிப்பெண்ணும் பெற்று இருந்தார்மருத்துவ படிப்பில்சேருவதற்கு 196 மதிப்பெண்கட்ஆப்  மதிப்பெண்ணாக உள்ளது.உயிரியல் பாடத்தில் மதிப்பெண் குறைவாக போடப்பட்டு இருப்பதாககருதிய எனது மகள் அந்த பாடத்திற்கான விடைத்தாளை ஆன்லைன்மூலம் பெற்றார்.
ஒரு மதிப்பெண் குறைவு
அதன்பின்பு மறுமதிப்பீடு செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த நிலையில் எனது மகள்வகுப்பு ஆசிரியையிடம் கேட்ட போது,மறுமதிப்பீடு செய்ய தேவையில்லை என்று கூறி உள்ளார்.இதன்காரணமாக மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை.இருந்த போதிலும் உயிரியல் பாட விடைத்தாள் மறுமதிப்பீடுசெய்யப்பட்டு எனது மகள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்ணை விட ஒருமதிப்பெண் குறைவாக பெற்றுள்ளதாக திருத்தம் செய்து அரசுதேர்வுத்துறை அறிவித்தது.இதன்காரணமாகஎனது மகள் ஏற்கனவேவைத்திருந்த கட்ஆப் மதிப்பெண் 195.5 ஆக குறைந்து விட்டது.மறுமதிப்பீட்டுக்காக கட்டணம் எதுவும் செலுத்தாத நிலையில் எனதுஉயிரியியல் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தது தவறு.
கட்ஆப் மதிப்பெண்
எனவேஎனது மகள் ஏற்கனவே உயிரியியல் பாடத்தில் பெற்றமதிப்பெண்ணான 197 மதிப்பெண்ணை வழங்க அரசு தேர்வுத்துறைக்குஉத்தரவிட வேண்டும்.அதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கானகட்ஆப் மதிப்பெண்ணை 196  என்று  கணக்கிட மருத்துவ மாணவர்சேர்க்கை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி கேள்வி
இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்ததுமனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எம்.அஜ்மல்கான்வக்கீல்எட்வின்பிரபாகர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்அரசு தேர்வுத்துறைஇயக்குநர் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல்மனுதாரரின் மகள்ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மறுமதிப்பீடுமறுகூட்டல் ஆகியஇடங்களில் ‘டிக்‘ செய்துள்ளார் என்றும்அதன்காரணமாகவேமறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.அப்போது நீதிபதி, ‘‘மனுதாரரின் மகள் மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் செலுத்தாத போதுஎப்படி மறுமதிப்பீடு செய்யலாம்?’’ என்று அரசு வக்கீலிடம் கேள்விஎழுப்பினார்.
தவறு

அதன்பின்பு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறிஇருப்பதாவது:–‘மனுதாரரின் மகள் மறுமதிப்பீட்டுக்கு ஆன்லைன் மூலம்விண்ணப்பித்துள்ளார்ஆனால்அதற்கான கட்டணத்தைசெலுத்தவில்லைகட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மறுமதிப்பீடுசெய்யப்பட வேண்டும்ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தாலும் அவர்  கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மறுமதிப்பீடுசெய்யக்கோரிய மனுதாரர் மகளின் கோரிக்கையை அரசு தேர்வுத்துறைஏற்று இருக்கக்கூடாதுஎனவேமறுமதிப்பீடு செய்தது தவறு.ஆகவே,மனுதாரரின் மகள் ஏற்கனவே உயிரியியல் பாடத்தில் பெற்று இருந்தமதிப்பெண்ணை உடனடியாக வழங்க வேண்டும்அதன் அடிப்படையில்அவருக்குமருத்துவ படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் 196 என்றுநிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment