Sunday 23 June 2013

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு எப்போது?


                           மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. நடப்பு, 2013 -14ம் கல்வியாண்டில்,
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இம்மாதம், 18ம் தேதி துவங்கிய முதல்கட்ட கலந்தாய்வு, நேற்றுடன் முடிவடைந்ததுஇதில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 1, 823 எம்.பி.பி.எஸ்., இடங்களும், தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. 2ம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரம் துவங்கும் என, தெரிகிறது.

                             இதுகுறித்து, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: இந்த ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முறையே, அதிகரிக்கப்பட்டுள்ள, 85, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய சுகாதார துறையின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளோம். இதன்படி, 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்ட, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கு, ஜூலை இரண்டாம் வாரத்தில், கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.  கலந்தாய்விற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, சுகுமார் கூறினார்.

No comments:

Post a Comment