Wednesday 19 June 2013

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு


                 சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் பணியில் ஈடுபட மனநல ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி
பள்ளிகளில் மன உளைச்சலுக்கு உள்ளாகி படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:

              சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் குடும்ப மற்றும் சமூக பிரச்னைகளால் உடல் மற்றும் மன ரீதியில் பாதிக்கப்பட்டு மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி உளைச்சலில் இருந்து விடுபட உதவும் வகையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மனநல ஆலோசகர் வீதம் நியமிக்கப்படுவார்கள். இதற்கு எம்.. சைக்காலஜி மற்றும் எம்.எஸ்சி. சைக்காலஜி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment