Friday 12 July 2013

12,618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிக்க நடவடிக்கை



             தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிப்பதற்கான பணி வரன்முறைகளை வகுத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வரன்முறைகள் கடந்த
செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் சி.வி.சங்கர் வெளியிட்ட உத்தரவு:வேலைவாய்ப்பு பதிவின் அடிப்படையில் கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தகுதியான நபர்களின் பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பெறுவார்.பெண்களுக்கு ஒதுக்கீடு: செயலாளர் பணி நியமனத்தில் ஜாதி வாரியாகவும், பெண்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படும். கிராம பஞ்சாயத்து செயலாளர்களை நியமிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக குழு அமைக்கப்படும்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.தகுதி என்ன? பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படுவோரின் வயது வயரம்பு 18-க்கு மிகையாகவும், 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 35. செயலாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.ஒரு கிராம பஞ்சாயத்துக்குள் அவருடைய வீடு இல்லாவிட்டால் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்படமாட்டார். தகுதியான நபர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சிக்குப் பிறகு தேர்வு நடத்தப்படும். இரண்டு ஆண்டுகள் வரை தாற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படும். இந்த காலத்தில் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு (வளர்ச்சி) உள்ளது.கிராம பஞ்சாயத்து செயலாளரை ஒரு வட்டாரத்துக்குள்ளேயே இடமாற்றம் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம பஞ்சாயத்து) உள்ளது. வெறோரு வட்டாரத்துக்குள் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் கருத்தைப் பெற்று ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் ஊரக வளர்ச்சி ஆணையாளருக்கு உள்ளது. கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் 58 வயது வரை மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சங்கர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் பதவிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்தப் பதவிக்கு ஏற்கெனவே அரசு வேலையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் பணியின்போது ஏதேனும் கடுமையான தவறுகளைச் செய்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment