Friday 19 July 2013

40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை


            காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார். 24
மணிநேரம் தமிழ் தேர்வு எழுதுவதற்கான, சாதனை முயற்சி, ஜூலை 13ல் நடந்தது. காலை 10 மணி முதல், மறுநாள் காலை 11.20 வரை தேர்வு எழுதினார். தமிழ் முதல், இரண்டாம் தாள் என, மொத்தம் 8 தேர்வுகள் வைக்கப்பட்டன. மூன்று மணி நேரத்திற்கு, 10 நிமிடம் இடைவெளி விடப்பட்டது. அருண்குமாருடன் பிளஸ் 2 படிக்கும், 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தூங்காமல் இருந்தனர். இப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் தொடர்ச்சியாக செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.

                          அருண்குமார், 24 மணி நேர தேர்வை எழுதி முடித்தார்.இவர் எழுதிய விடைத்தாள்கள், பல ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டது. இதில், முறையே 186, 185, 189, 177 என, மதிப்பெண்கள் பெற்றார். பள்ளி தொடங்கி 40 நாட்களுக்குள், தமிழ் பாடம் முழுவதையும் படித்து, அதில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் ,மாணவர் அருண்குமார் தேர்வு எழுதியுள்ளார். அருண்குமார் கூறுகையில், "எட்டாம் வகுப்பிலிருந்தே தமிழ் மீது ஆர்வம். அதற்கு என்னுடைய தமிழாசிரியர் ஜெயம்கொண்டானும் ஒரு காரணம். தாளாளர் நாராயணன் ஏற்பாட்டில், அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டன. சராசரியாக 184 மதிப்பெண் பெற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment