Wednesday 17 July 2013

ஏ.இ.ஓ. அலுவலக ஊழியராக பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிப்பு - நாளிதழ் செய்தி



           ஓமலூர் ஒன்றிய ... அலுவலக ஊழியருக்கான பணிகளை பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் புகார்ணீ எழுந்துள்ளது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் போதுமான அலுவலர்கள் இல்லாத நிலையில் பணிப்பதிவேடு, ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆசிரியர்கள் கவனித்து வருகின்றனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய தபால்களை இவர்களே தட்டச்சு செய்து அனுப்புகின்றனர். இவ்வாறு பணியாற்றுவதால் பல பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வகுப்புக்கே வருவதில்லை என்று பெற்றோர் புகார் கூறுகின்றனர். மேலும் சில ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு செல்வதாகபோக்குகாட்டி விட்டு பள்ளிக்குடிமிக்கிகொடுத்து விட்டுஎஸ்கேப்ஆவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள தேக்கம்பட்டி, ரெட்டிபட்டி காட்டுவளவு, குள்ளக்கவுண்டனூர், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்நிலை தொடர்கிறது.
                  இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மனோகரன் கூறியதாவது: உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த தட்டச்சர்கள் பலர் பதவி உயர்வில் சென்று விட்டனர். அந்த இடம் காலியாக உள்ளது. அதே போல் எங்களது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் இரண்டு தட்டச்சர்களில் ஒருவர் பதவி உயர்வில் சென்று விட்டார். இதனால் உதவி தொடக்கக் கல்வி அலுவலக டைப்பிஸ்டுகள் டெபுடேசனில் பணியை கவனித்து வருகின்றனர். ஓமலூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தட்டச்சர் பதவி உயர்வில் சென்று விட்டார். இதனால் பணிகள் தேக்கம் ¬ டவதைத் தடுக்க பள்ளி நேரத்துக்கு பின்னர் தட்டச்சு தெரிந்த ஆசிரியர்களை அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. வீட்டில் வேலைக்காரர் வராவிட்டால் வீட்டில் இருப்பவர்களே வேலைகளை பகிர்ந்து கொள்வது போல தான் இதுவும். அரசு தட்டச்சர் காலியிடங்களுக்கு புதிய ஆட்களை நியமிக்கும் வரை நெருக்கடி தொடரும். இவ்வாறு மனோகரன் கூறினார்
.

No comments:

Post a Comment