Thursday 18 July 2013

இலக்கணத்தை எளிய முறையில் கற்கலாம்: பயிற்சியில் தகவல்



                   "செயல்வழி கற்றல் மூலம் இலக்கணத்தை கற்று கொடுப்பதால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி முகாமில் பயிற்சியாளர்கள் பேசினர். அனைவருக்கும்
இடைநிலைக்கல்வித்திட்டத்தின் (ஆர்.எம். எஸ்..,) சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி முகாம் நடந்தது. 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலையும், கற்றலையும் எளிமையாக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியாளர்கள் ஆனந்தன், கலைவாணி, அனிதா மற்றும் தாஜீதீன் பயிற்சி அளித்தனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
                      
பயிற்சியாளர்கள் பேசியதாவது: மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க பாடங்களை புரியும்படி தெளிவாக நடத்த வேண்டும். ஆங்கில மற்றும் தமிழ் இலக்கணம் கற்பதில் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதை செயல்வழி கற்றல் மூலம், ஆர்வமாக நடத்த வேண்டும். அப்போது மனதில் எளிமையாக பதியும். அரசு பொதுத்தேர்வை மாணவர்கள் பயமில்லாமல் எதிர்கொள்ளும்வகையில் ஆசிரியர்கள் பயிற்சியளிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். மனதளவிலும், உடலளவிலும் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது குறித்து ஆசிரியர்கள் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர் வகுப்பு தேர்வுகள் வைக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். அடுத்தாண்டு புதிதாக வரும் தொடர் நிலை கற்றல் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். மதிப்பீட்டு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, பயிற்சியாளர்கள்  பேசினர்.
                       
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். வரும் 26, 27ம் தேதிகளில் இப்பயிற்சி தொடர்வதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். +2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். மனதளவிலும், உடலளவிலும் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது குறித்து ஆசிரியர்கள் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர் வகுப்பு தேர்வு வைக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். அடுத்தாண்டு புதிதாக வரும் தொடர் நிலை கற்றல் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும்

No comments:

Post a Comment