Monday 8 July 2013

பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு



                    "பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார். வத்தலக்குண்டு கே.பி. என்.,
கலை கல்லூரி மனிதவள மேம்பாட்டு சங்க துவக்க விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசியதாவது: "கிராமப்புற மாணவர்களால் சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் அதிகம் பேருக்கு ஏற்படுகிறது. இந்திய அளவில் பட்டப்படிப்பு படிப்பவர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி செல்கின்றனர். அதில் தமிழகத்தின் பங்கு 2 சதவீதம். ஆண்டுதோறும் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர் சதவீதம் குறைந்து வருகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தை கல்லூரிகள் வலியுறுத்த வேண்டும். பட்டப் படிப்போடு தலைமைத்துவம், வேலைக்கு தகுதியுள்ள திறன் வளர்த்தல், தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்," என்றார்.

No comments:

Post a Comment