Wednesday 17 July 2013

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை: மாணவர் சேர்க்கை அவகாசம் நீடிப்பு


             தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் எம்.பி.., எம்.எஸ்சி, எம்.காம், எம்., எம்.சி., பி., பி.எஸ்சி, பி.காம், பி.பி., பி.சி. ஆகிய பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான அட்மிஷன் 26ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டம் படித்து இரண்டு ஆண்டு ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் பி.எட் படிப்பில் சேரலாம். இதற்கான நுழைவு தேர்வு விண்ணப்பம் கல்வி மையத்தில் பெற்று 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்தவர்கள் நேரடியாக இரண்டு ஆண்டு எம்.பி.. வில் சேரலாம். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்ள் எம்.எஸ்சி. சைக்காலஜி சேரலாம். வக்கீல்கள், போலீசார் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் எம். கிரிமினாலஜியில் சேரலாம். சமூக பணியில் இருப்பவர்கள், பட்டம் பெற்றவர்கள் எம். சோஷியாலஜி, சோஷியல் ஒர்க் படிப்பில் சேரலாம். பட்டம் பெற்றவர்கள் பல்வேறு பட்ட மேற்படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ படித்தவர்கள் இரண்டு ஆண்டுகளில் பி.சி. பட்டமும், பட்டப் படிப்பில் பி.எஸ்சி கம்ப்யூட்டர், பி.சி., பி.ஜி.டி.சி. படித்திருந்தால் 2ம் ஆண்டு நேரடியாக எம்.சி.ஏவில் சேரலாம்.

                           .டி., டிப்ளமோ, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் பல்வேறு பட்ட படிப்புகளிலும் சேரலாம். திறந்த வெளி படிப்பு முறையின் கீழ் 18 வயது நிரம்பியவர்கள், எந்தவித அடிப்படை கல்வித் தகுதி இல்லாதவர்கள் 6 மாத ஆயத்த ஆயத்த படிப்பு தேர்ச்சி படிப்புக்கு பின் பட்டப் படிப்புகளில் சேரலாம். அட்மிஷன் விபரங்களுக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தை அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment