Monday 8 July 2013

சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி



                      2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச்
செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. கோல்கட்டா ..எம்., பன்னாட்டு ஆடிட் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸூடன் இணைந்து நிதிச் செய்தியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சியை நடத்துகிறது.
                    
பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளில் நமது இளைஞர்கள் பயிற்சி பெற்று இன்றைய பொருளாதார யுகத்தில் சிறப்பான வேலை பெற இது உதவும். இந்தியாவிலும் பன்னாட்டு அளவிலும் நிதிச் செய்தியாளர்களுக்கான பணி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தப் பயிற்சியானது அடிப்படை மற்றும் மேம்பட்ட அடுத்த நிலை என 2 நிலைகளில் தரப்படும். துவக்கத்தில் நேரடி முறையில் இது நடத்தப்படும். எனினும் விரைவில் தொலை தூரக் கல்வி முறையிலும் இது நாடெங்கும் இப்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்குத் தரப்படும். நவீன தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் இருக்கக்கூடிய பயிற்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment