Thursday 11 July 2013

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்



           இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, ஏற்கனவே,
5,000த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயித்து, தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களைwww.tn.gov.in என்ற, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு வெளியிட்டுள்ளது.
                       
வழக்கம்போல், பெரிய பள்ளிகளுக்கு, அதிகளவிலும், சிறிய பள்ளிகளுக்கு, குறைவனான கட்டணங்களையும், கட்டண நிர்ணய குழு, நிர்ணயித்துள்ளது. பெற்றோர், தமிழக அரசு இணைய தளத்தின் மூலம், புதிய கட்டண விவரங்களை அறியலாம்.மேலும், புதிய கட்டண விவரங்களை, அறிவிப்பு பலகையில், பள்ளி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும் என, கட்டண குழு உத்தரவிட்டுள்ளது
.

No comments:

Post a Comment