Saturday 6 July 2013

படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


                        ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல் இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது. ஒரு செயலில் ஆர்வம் இருக்கும்பொழுது தான்
கவனம் ஏற்படும். கவனம் என்பது இயற்கையிலேயே உள்ள ஆற்றல் அல்ல. நம்மால் வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு திறன். பொதுவாக, ஆர்வம் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக பாடல்கள், கிரிக்கெட் விளையாட்டு போன்றவை. இதே கவனம், படிக்கும் விஷயங்களில் வருவதில்லை. ஏனென்றால் பாடத்தில் இந்த ஆர்வம் இருப்பதில்லைஇயல்பான ஆர்வம் இல்லையெனில், நமது கவனத் திறன் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு செயல்களில் கவனம் செலுத்த முடியாது. இதற்கு விதிவிலக்காக, பழக்கப்பட்ட இயந்திரத் தனமன செயலையும், சிந்தனை சம்பந்தப்பட்ட செயலையும் சிறிது நேரம் ஒரே சமயத்தில் செய்யலாம்.
படிப்புச் சூழல் எப்படி?
            படிப்புச் சூழலை எவ்வாறு அமைத்துக்கொள்கிறமோ, அதைப் பொறுத்துதான், படிக்கும் ஆர்வம் நிலைத்திருக்கும். பொதுவாக பலர் படுக்கையில் அமர்ந்துகொண்டு, படிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இம்முறையில் உற்சாகத்தோடு படிக்கச் சென்றாலும் கூட, சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், சிறு வயதிலேயே நமது உடலும், மனமும் படுக்கை என்றவுடன் தூங்கும் இடம் என்று பழகிவிட்டது. எவ்வாறு தூங்குவதற்கு படுக்கை அறையும், "டிவி" பார்க்க தனி இடமும் இருப்பதுபோல், படிப்பதற்கு என்று தனி இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்படுக்கை அறையைப் பார்த்தவுடன் தூக்கம் வருவது போல, சமையல் அறையை பார்த்தவுடன் பசி உணர்வு தூண்டப்படுவது போல, படிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தவுடன் படிக்கும் ஆவலைத் தூண்டும்படி இடம் அமைய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிக்கக் கூடிய இடத்தைத் தேடுவதால் நேரம் விரயமாகிறது
படிக்கும் இடத்தை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

* காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக இருக்க வேண்டும்.
*
தேவையான வரைபடங்கள், முக்கிய குறிப்புகள் சுவரில் ஒட்டிவைத்துக் கொள்ளலாம்.
*
இடையூறுகள் அதிகம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்.
*
சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.
*
படிக்கும் போது தேவையான பொருட்களை (பேப்பர், பேனா, பென்சில், தண்ணீர்) முதலிலேயே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இவற்றைத் தேடுவதால் நேர விரயம் மற்றும் மன உளைச்சல் ஏற்படும். இதையெல்லாம் பின்பற்றினால், படிப்பு தானாக வந்து விடும்
.

No comments:

Post a Comment