Wednesday 17 July 2013

தரம் உயர்ந்த பள்ளிகளுக்கு கவுன்சிலிங்: ஆசிரியர்கள் வேதனை - நாளிதழ் செய்தி



               தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருவகை
பள்ளிகளிலும் சில பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் நிலை உள்ளது.மதுரை மாவட்டத்தில் சில உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால் இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு, முதன்மை கல்வி அலுவலகத்தில் கவுன்சிலிங் நடக்கிறது. பொதுவாகவே மதுரையில் காலியிடங்கள் இல்லாத நிலை உள்ளதால், இந்த ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களுக்கு கட்டாயமாக சென்றாக வேண்டியுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர்ஞானராஜ் கூறுகையில், ""மேல்நிலைப் பள்ளிகளைப் போல, நடுநிலைப் பள்ளிகளாக இருந்து, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் விபரங்களையும் வெளியிட வேண்டும். அதன்பின் உள்ள காலியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்கள் பாதிப்படைவர்,'' என்றார்.

No comments:

Post a Comment