Monday 8 July 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி



             தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை கல்வி
எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு 28.5.2013ல் வெளியானது. இதில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணாக, பி.எச்டி., படித்திருந்தால் 9 மதிப்பெண், முதுகலை எம்.பில்., உடன் சிலட்/நெட் முடித்திருந்தால் 6 மதிப்பெண் என்றும், முதுகலை பட்டத்துடன் சிலட்/நெட் முடித்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், எம்.பில்., படிப்பு தொலை நிலைக் கல்வியில்படித்திருந்தால் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
                                  
உயர் கல்வித் துறைற உத்தரவில், தொலைநிலை கல்வியில் எம்.பில்., படிப்பு 2007-2008 முதல் நடத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், டி.ஆர்.பி., அறிவிப்பில், 2006-2007 ஆண்டு வரை தொலை நிலைக் கல்வி எம்.பில்., படிப்பை செல்லாது என்ற உத்தரவால், அந்த ஆண்டுகளில் (2006-2007) படித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளின் பேராசிரியர்கள் கனவு கேள்விக்குறியாகி உள்ளது என, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.மதுரையை சேர்ந்த சுயநிதி கல்லூரி உதவிபேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், 2008ல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களில், முதுகலை பட்டத்துடன், தொலை நிலை கல்வியில் எம்.பில்., படித்தவர்களாக பலர் உள்ளனர். ஆனால், தற்போது "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுக்கு, தொலைநிலை எம்.பில்., படிப்பை டி.ஆர்.பி., எடுத்துக்கொள்ளாதது எந்தவிதத்தில் நியாயம், என்றனர்
.

No comments:

Post a Comment