Friday 12 July 2013

சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு


                                ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான,
"கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய, ஆறு சட்ட கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, 1,052 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, 4,443 பேர் விண்ணப்பித்தனர். இதில், 4,163 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஜாதி வாரியான, "கட்-ஆப்" மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரிவு                                                          "கட்-ஆப்" மதிப்பெண்

பொது பிரிவு                                                           85.25
பிற்படுத்தப்பட்டோர்                                        73.25
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்)             69.62
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்                    71.62
ஆதிதிராவிடர்                                                    75
ஆதிதிராவிடர் (அருந்ததியினர்)             72.50
பழங்குடியினர்
                                                 64.75

No comments:

Post a Comment