Monday 8 July 2013

மனித வளமிக்கவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்



             "மாணவர்கள் அறிவுக்கூர்மையை மேலும் வளர்த்து மனித வளம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும்" என தெரசா பல்கலை., துணைவேந்தர் மணிமேகலை கூறினார். அரசனூர், பாண்டியன் சரஸ்வதி யாதவ் இன்ஜினியரிங்
கல்லூரியில், பட்டமளிப்பு விழாவில் கொடைக்கானல் தெரசா பல்கலை., துணைவேந்தர் மணிமேகலை பட்டம் வழங்கி பேசியதாவது: "இன்றைய அறிவியல் தொழில்நுட்ப காலத்தில், ஆசிரியர்களை விட மாணவர்கள் அதிக திறமையுள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் அறிவுக்கூர்மையை மேலும் வளர்த்து மனித வளம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். எத்தனை வயதானாலும் படித்துக்கொண்டே இருக்கலாம். புத்தகத்தை நண்பனாக்கி கொள்ளுங்கள். மாணவர்கள் தம்மை மனித வளம் மிக்கவர்களாக மாற்றிகொண்டால், இந்தியா மேம்பாடு அடையும். ஆராய்ச்சித்துறையில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. சாதனையாளர்களாக உருவாகும் போது, பெற்றோரை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். மாணவர்கள் பண்புள்ளவர்களாக, நம் நாகரீகத்தை கடைபிடிப்பவர்களாக உருவெடுக்க வேண்டும்." என்றார்.

No comments:

Post a Comment