Friday 12 July 2013

Tamil Nadu Rural Students Talent Search Scheme Examination ( TRUST ), September 2013 - Application Form

                  9–வது முதல் 12 வது வகுப்புவரை படிக்கும்  மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக திறனாய்வுத்தேர்வு நடக்கஉள்ளதுஅதற்கு விருப்பம்
 உள்ளவர்கள் ஆகஸ்டு 2–ந்தேதி வரைவிண்ணப்பிக்கலாம். ஊரகப்  பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம்வகுப்பு தேர்வில் 2012-13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்தமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவமாணவர்களிடையேதிறமை மிக்கவரைத் தேர்ந்தெடுத்து, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கானபடிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் 50 மாணவர்கள்மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்வருவாய் மாவட்டம்தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

                           அந்த மாணவ –மாணவியரை தேர்ந்தெடுக்க  மாநகராட்சி  மற்றும்நகராட்சிப்பகுதியில் அமைந்த பள்ளிகளைத் தவிர்த்துமாநிலம்முழுவதும் ஊரகப் பகுதியில் அமைந்துள்ள அங்கீகாரம் பெற்றபள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத்தேர்வுஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறதுஅதன்படி செப்டம்பர் மாதம்22–ந்தேதி நடைபெற உள்ளதுமாணவ மாணவிகள் திறனாய்வுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனதகுதிகள்தற்போது 2013–2014 கல்வி ஆண்டில் தொடர்ந்து 9–ம்  வகுப்பில்  பயிலும்மாணவ மாணவியர் இத்திறனாய்வுத்தேர்வு திட்டத்திற்கு தகுதிபடைத்தவராவார்கள்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோரின் ஆண்டுவருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்மாணவர்கள்வருவாய்த்துறையிலிருந்து பெற்றோரின் வருமானச்சான்று பெற்றுஅளித்தல் வேண்டும். 9–வது வகுப்பில் படிக்கும் தகுதியுள்ள மாணவர்கள்விண்ணப்பப் படிவத்தினை www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில்இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருவாய் சான்றிதழுடன்,அன்னார் பயிலும் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று ஆகஸ்டுமாதம் 2ந்தேதிக்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும்தேர்வுக்கட்டணம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ,மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ.5 சேவைக் கட்டணம் ரூ.5சேர்த்து ரூ.10– பள்ளித்தலைமை ஆசிரியர் மூலமாக பணமாக உரியமுதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்தவேண்டும்இந்த தகவலைஅரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment