Thursday, 1 August 2013

நூலகர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு

தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வால்இடைநிலை ஆசிரியர்களுக்குஎவ்வித பலனும் இல்லை என கூறிஅடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காகதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், அவசர செயற்குழு கூட்டம்வரும், 4ம் தேதி
நாமக்கலில் நடக்கிறது. இதேபோல்நூலகத் துறை ஊழியர்களும்ஊதிய உயர்வில்,விடுபட்டுள்ளதாகபுகார் கிளம்பியுள்ளது. இதனால்பாதிக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்கள்போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக,தகவல் வெளியாகி உள்ளது. ஊதிய குறைதீர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்துசமீபத்தில்அரசு ஊழியர்ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வைதமிழக அரசு வெளியிட்டது. இதில்சில தரப்பினர்அதிருப்தி அடைந்துள்ளனர். "இடைநிலை ஆசிரியர்களுக்குஊதிய உயர்வு வழங்கவில்லைஎனதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிகுற்றம் சாட்டியுள்ளது. இந்த பிரச்னை குறித்து விவாதித்துஅடுத்தகட்ட முடிவை எடுப்பதற்காகசங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்வரும், 4ம் தேதிநாமக்கலில் நடக்கும் எனசங்க பொதுச்செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதில்அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,போராட்ட முடிவு எடுக்கப்படலாம் எனகூறப்படுகிறது. இதேபோல், நூலகத் துறை பணியாளர்களும்அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து,தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகம் சி மற்றும் டி பிரிவு தலைவர் ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: நூலக பணியாளர்களின் தர ஊதிய வித்தியாசத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனபலமுறைதமிழக அரசிடமும்ஒரு நபர் குழுவிடமும் வலியுறுத்தினோம். ஆனாலும்நூலகர்களுக்குதர ஊதியம்உயர்த்தி வழங்கவில்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது ஊதிய குழுவில்,உதவியாளர் பணிக்கான ஊதியமும்இரண்டாம் நிலைஇருப்பு சரிபார்ப்பு நூலக பணியாளர்களுக்கான ஊதியமும்ஒரே நிலையில் இருந்தது. இளநிலை உதவியாளர் மற்றும் மூன்றாம் நிலை நூலகப் பணியாளர்களும்ஒரே ஊதியம் பெற்று வந்தனர்.                                                     தற்போது,இவர்களுக்கிடையேதர ஊதியத்தில்முரண்பாடு நிலவுகிறது. தர ஊதிய வித்தியாசத்தை போக்கிடதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை எனில்,இவர்களும்போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment