Friday 18 October 2013

குரூப் - 1 தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை



                    "குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வயதாக உயர்த்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கு, பொதுப் பிரிவினருக்கு 30 வயதும், தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியினருக்கு, 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 1 தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த 12ஆண்டுகளில், ஐந்து முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரக்கணக்காணோர், குரூப் - 1 தேர்வு எழுது முடியாமல் போகிறது. கேரளாவில், குரூப் - 1 தேர்வு எழுத வயது வரம்பு, 50ஆகவும், மேற்குவங்கம், திரிபுரா, அரியானா, அசாம், குஜராத் மாநிலங்களில், 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழகத்திலும் குரூப் - 1 தேர்வு எழுத, பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு, 50 ஆகவும் வயது வரம்பை உயர்த்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பாண்டியன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment