Saturday 5 October 2013

பெற்றோர்களே! அதற்கு நீங்கள் தயாரா?


        கற்றல் செயல்பாடு என்பது, ஒரு குழந்தை எதைக் கற்கிறது என்பது மட்டுமல்ல, அது எவ்வாறு கற்கிறது என்பதையும் உள்ளடக்கிய ஒன்றாகும். ஒரு சுவரை எழுப்ப, எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு செங்கலையும் போன்றதுதான் கற்றல் செயல்பாடு. ஒரு நல்ல செயல்திட்டம்,
கல்வி கற்பதை சந்தோஷமான ஒன்றாக மாற்றுகிறது மற்றும் சுயமாக கற்றல் மற்றும் எதிர்கால கல்வி உள்ளிட்ட அம்சங்களையும் சிறப்பாக கட்டமைக்கிறது.
கற்றலின் விதங்கள்
                ஒரு திட்டமிட்ட கற்றல் செயல்பாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு விதமான சுய செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. சில முக்கியமான கற்றல் செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
Spatial - காட்சி அடிப்படையிலானது
Aural - கேட்டல் அடிப்படையிலானது
Verbal - பேசுதல் மற்றும் எழுதுதல் அடிப்படையிலானது
Physical - உடல் மற்றும் தொடுதல் அடிப்படையிலானது
Logical - தெளிவான பகுப்பாய்வு அடிப்படையிலானது
Social - குழுவில் கற்றல் அடிப்படையிலானது
Solitary - தனியாக கற்றல் அடிப்படையிலானது
                    ஒவ்வொரு தனி மனிதரும், மேற்கூறிய அம்சங்களில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அம்சங்களையோ தேர்வு செய்கிறார். ஒரு குழந்தை, புவியியல், பிசிகல் உள்ளிட்ட பாடங்களில் காட்சிப்பூர்வமான கற்றலில் சிறப்பாக செயல்படலாம். அதேநேரம், பட்டியல் மற்றும் பார்முலா ஆகியவற்றை மனப்பாடம் செய்ய, குழு கற்றலை விரும்பி, அதில் சிறப்பாக செயல்படலாம்.
உங்கள் குழந்தைக்கு எது பொருந்தும்?
                     பலவிதமான கற்றல் நடைமுறைகளையும் அறியும் வாய்ப்பு உங்கள் குழந்தைக்கு வழங்கப்படுதல் முக்கியம். அதாவது, வீடியோக்களைப் பார்த்தல், தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுதல், நடவடிக்கை அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் சத்தமாக படித்தல் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு ஆர்வமுள்ள துறைகள் ஏதேனும் ஒன்றிலிருந்து நீங்கள் ஒரு தலைப்பை தேர்வு செய்தால், (அந்த தலைப்பு, காட்டு விலங்குகளின் வாழ்க்கை, விண்வெளி மற்றும் ஆரோக்கிய உணவுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம்) அது தொடர்பாக, ஒரு ஆல்பத்தை தயார் செய்யுமாறு உங்கள் குழந்தையிடம் கூறலாம். இதன்மூலம், உங்கள் குழந்தை, என்ன மாதிரியான கற்பித்தல் செயல்பாட்டை விரும்புகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டிற்கு உதவும் வகையிலான புத்தகங்கள், வலைதளங்கள், வீடியோக்கள் மற்றும் சி.டி., ஆகிய உபகரணங்களைக் கண்டறிந்து, அவற்றை உங்கள் குழந்தைப் பெறுவதற்கு உதவ வேண்டும்.
                         மேற்கூறிய நடவடிக்கைகளில் உங்களின் குழந்தையின் ஈடுபாட்டை நன்கு கவனிப்பதன் மூலமாக, அதற்கு, எந்த மாதிரியான கற்றல் செயல்பாட்டில் விருப்பமுள்ளது என்பதை உங்களால் கண்டறிய முடியும். உங்கள் குழந்தைக்கு பிடித்தமான கற்றல் செயல்பாட்டில் அதை ஊக்குவிப்பதன் மூலம், கற்றலில் உங்கள் குழந்தை சிறப்பான மேம்பாடு அடைவதுடன், கற்றலின் மீதான அதன் ஆர்வமும் அதிகரிக்கிறது.
மதிப்பாய்வு
                       உங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கற்பித்தல் செயல்முறைகள்(pedagogy) குறித்து கவனிப்பது அவசியம். சில பள்ளிகள், அனைத்து மாணவர்களையும் நன்றாக சென்றடையும் கற்பித்தல் செயல்முறையைப் பின்பற்றும். எனவே, நீங்கள் விரும்பும் கற்பித்தல் செயல்முறையை, உங்களின் வீட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். உங்கள் குழந்தைக்கு, கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்முறை எது என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். கற்றலுக்கு, பல்வேறான வாய்ப்புகளை நீங்கள், குழந்தைக்கு வழங்குகையில், அவர்கள் கற்றலை மிகவும் விரும்பத் தொடங்குவார்கள்.
ஆர்வம்

                 கற்பிக்கப்படாமலேயே பல கடினமாக விஷயங்கள் கற்றுக்கொள்ளப்படுபவை. பேசுவதற்கு கற்றுக்கொள்வது மிகவும் அடிப்படையான ஒரு திறமை. அதை குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். மேலும், உடல் ரீதியான பல திறன்களையும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பேலன்ஸ் செய்தல், கீழே விழாமல் விளையாடுதல், பலவிதமான விளையாட்டு உபகரணங்களையும் பாதுகாப்புடன் கையாளுதல் உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும். இதுபோன்ற திறன்கள், பிறப்பிலிருந்தே கிடைப்பவை. உங்கள் குழந்தையின் கற்றல் மேம்பாட்டில் அக்கறையுடனும், விடாமுயற்சியுடனும், திட்டமிட்டும் தொடர்ந்து செயல்பட்டால், அவர்களின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. பெற்றோர்களே! அதற்கு நீங்கள் தயாரா?

No comments:

Post a Comment