Sunday 6 October 2013

சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை


         சீனாவில் ஆசிரியர்களுக்கு உயரிய மரியாதை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 21 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சீனாவில் பொதுமக்கள்
ஆசிரியர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்தும் நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தை கிரேக்கமும், துருக்கியும் பெற்றுக் கொண்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலாச்சாரம் சீனாவில் நிலவி வருவதாகவும், இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதலான மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                   பெரும்பான்மையான மாணவர்கள் சீனாவில் ஆசிரியர்களை மதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒன்பதாம் பத்தாம் இடங்களை வகிக்கின்றன. ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என்றே பலர் கருதி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment