Wednesday, 31 October 2012

நிலம் புயல் எச்சரிக்கை : அவசர தொலைபேசி எண் சென்னை மாநகராட்சி அறிவிப்பு



திருவொற்றியூர்        25993494 9445190001  

மணலி            25941079, 9445190002 
 
மாதவரம்            25530427, 9445190003  

தண்டையார்ப்பேட்டை        25951083, 9445190004

ராயபுரம்            25206655    , 9445190005

திரு.வி.. நகர்            26741802    , 9445190006

அம்பத்தூர்            26253331    , 9445190007  

அண்ணா நகர்            26412646, 9445190008  

தேனாம்பேட்டை        28170738    , 9445190009

கோடம்பாக்கம்        24838968    , 9445190010

வளசரவாக்கம்            24867725, 9445190011

ஆலந்தூர்            22342355    , 9445190012

அடையார்            24425961, 9445190013

பெருங்குடி            22420600, 9445190014

சோழிங்கநல்லூர்        24500923    , 9445190015  

சென்னை மாநகராட்சி  ரிப்பன் மாளிகை பொதுமக்கள் தொடர்பு மையம் எண்
. 1913, 25619299.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக திரு.இளங்கோவன் நியமனம்



                மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் இதுவரை இந்தப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பாடத்திட்டங்களை உருவாக்குதல், புதிய கற்பித்தல்

ஆசிரியரை கத்தியால் தாக்கிய 9ம் வகுப்பு மாணவன்



           விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் தாக்கி தப்பினான்விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை சேர்ந்த ராஜேஷ், 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ஒரு வாரமாக ராஜேஷ், பள்ளிக்கு செல்லவில்லை; கணக்கு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: சனிக்கிழமைகளில் நடக்குமா?



        நீலம் புயல் இன்று கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், கல்வித்துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்



            முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது. 23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு



                      நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்'

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் வரும் 3ஆம் தேதி நாமக்கல்லில் நடக்கவுள்ளது.


மாநில தலைவர் திரு.மணி அவர்கள் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் திரு.பழனியப்பன் வரவேற்கிறார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் திரு.முத்துச்சாமி அவர்கள் பங்கேற்று பேச உள்ளார். மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர் உள்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

காற்றின் வேகத்தை சொல்லும் கணக்கு


கடலில் மீன் பிடிக்கும் படகு ஓட்டிகள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்கு புரியும் வகையில், அந்தந்த துறைமுகங்களில், எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதன் மூலம், காற்றின் வேகத்தை புரிந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனபுயல் எச்சரிக்கை கூண்டு எண்.1 முதல் 2 வரை, புயல் தொலை தூரத்தில் இருப்பதை குறிக்கிறது. கூண்டு எண்.3, துறைமுகங்களில் வழக்கத்தை விட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு எண்.4, கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போதிய நேரமிருப்பதை உணர்த்துகிறது.புயல் எச்சரிக்கை கூண்டு எண்.5, 6, 7 வரை, புயல் தீவிரமடையாததை குறிக்கிறது. மேலும், மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதை தெரிவிக்கிறது.புயல் எச்சரிக்கை கூண்டு எண். 8, 9, 10 வரை, பெருத்த அபாய எச்சரிக்கை, மணிக்கு 120 முதல் 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதை அறிவிக்கிறது.