Thursday, 15 November 2012

டி.என்.பி.எஸ்.சி., செயலராக விஜயகுமார் பொறுப்பேற்பு



                  டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்டோபர் 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலரான விஜயகுமார், தேர்வாணையத்தின் புதிய செயலராக அறிவிக்கப்பட்டிருந்தார். அரசின் உத்தரவு வந்ததும்,
உடனடியாக செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகவில்லை. தேர்வாணையத்தில், அவரை தக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி, செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் புதிய செயலராக, விஜயகுமார் 15.11.2012 அன்று பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment