Friday, 16 November 2012

தரமான ஆசிரியர்களை நியமிக்க பி.எட்., எம்.எட். படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு: மத்திய அரசு பரிசீலனை



          சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பி.எட்., எம்.எட். பட்டய ஆசிரியர் பயிற்சிகள் தரமானதாக இல்லாததே இதற்கு காரணமாகும்பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் அதற்கு தரமான ஆசிரியர்கள் தேவை.தரமானஆசிரியர்களை தேர்வு செய்ய
நுழைவுத்தேர்வு அவசியமாகிறது.நுழைவுத்தேர்வு மூலம் 

ஒரு மாணவனின் அறிவையும் படிப்பையும் சோதிக்க முடியும் என்ற அடிப்படையில் மத்திய மனிதவள மேப்பாட்டுத்துறை அமைச்சகம் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி வர்மா தலைமையில் குழுவை அமைத்தது.  
                           இந்தியாவில்உள்ள ஆசிரியர்களின் தகுதியையும் ஆசிரியர் பள்ளிபல்கலைக்கழகம் பாடத்திட்டம் ஆகியவற்றில்தரத்தை ஆராய்ந்து அது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம் குறித்து மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்வதற்குபேர் கொண்ட குழுவினை வர்மா தலைமையில் அமைத்ததுஇக்குழு கடந்த மாதம் தன்னுடைய அறிக்கையினை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.அந்த குழுவின் அறிக்கையில் பி.எட்.,எம்.எட்டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிகள் இந்தியாவில் இருப்பதாகவும் மாணவர் சேர்க்கை எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடு இதுவரை தேசிய அளவில் இல்லை என்று வருத்தம் தெரிவித்தும் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி அடைத்துள்ளதையும் எடுத்துகாட்டாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.          
                            ஆசிரியர் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு மட்டுமே ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும் என்று அந்தகுழு பரிந்துரை செய்தது.அந்த குழுவின்அறிக்கையை இந்த மாதம் நடந்த அனைத்து மாநிலகல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் தாக்கல் செய்து இதுகுறித்து நீண்ட விவாதத்தினை நடத்தி இந்த அறிக்கை ஒருமனதாக ஏற்று கொள்ளப்பட்டதாக மத்திய அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதுஇதன் மூலம் வரும் கல்வி ஆண்டில் பி.எட்.,எம்.எட்.,டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வரும் என்று கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment