Monday, 22 April 2013

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் "மே' மாதம் கருணை காட்டுமா தமிழக அரசு?



           தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம்வழங்க வேண்டும் என்றுபல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள்வலியுறுத்தியுள்ளன.அனைவருக்கும் கல்வி திட்டம்(எஸ்.எஸ்..,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் 
சம்பளத்தில்பகுதி   நேரஆசிரியர்களாக உடற்கல்விதையல்ஓவியம் மற்றும் கணினிஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்ததுஇவர்கள்,மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.பகுதி நேரமாக இருந்தாலும் அரசு வேலை என்பதால்பணிநிரந்தரம்செய்ய வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில்பல ஆயிரம் ரூபாய் வரைசம்பளத்தில் பணியாற்றிய முந்தைய பணிகளை உதறித் தள்ளிவிட்டுஇப்பணியில் சேர்ந்தனர்பெரும்பாலும், 40 வயதை கடந்தவர்கள். இவர்களுக்குகோடை விடுமுறையான மே மாதத்தில் சம்பளம்வழங்கப்படுதில்லை. "எங்களுக்கும் குடும்பம்குழந்தைகள் உண்டு.அரசு வேலை என்பதால் இங்கு வந்து சேர்ந்தோம்மே மாதம் மட்டும்சம்பளம் இல்லைஅந்த மாதத்தில் நாங்கள் எங்கே போய் வேலைபார்த்து குடும்பத்தை காப்பாற்றுவதுமே மாதம் பணிகள் ஒதுக்கினாலும்  அதை செய்ய தயாராக உள்ளோம் அல்லது மேமாதத்தில் சம்பளம் வழங்கிஅதை ஈடுகட்டும் வகையில் வரும்மாதங்களில் வேலை நாட்களை அதிகரித்து கொள்ளலாம்,'' எனபாதிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
                இதை கருத்தை தமிழாசிரியர் கழக மதுரை செயலாளர் ஜெயக்கொடி,சட்ட செயலாளர் வெங்கடேசன்தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாவட்ட பொருளாளர் தென்னவன் வலியுறுத்தியுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் முருகன்,""பகுதிநேரஆசிரியர்கள் பெரும்பாலும் முழுநேரமாகவே பணியாற்றுகின்றனர்கருணை அடிப்படையில் மே மாத சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment