Wednesday, 4 September 2013

செப்டம்பர் 8-ல் சென்னையில் உண்ணாவிரதம்: நாமக்கல் மாவட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்பு



            சென்னையில் வருகிற 8ஆம் தேதி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பெருமளவில் கலந்து கொள்ள முடிவு
செய்துள்ளனர். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள சீராய்வுக் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று, அதன்பிறகே, மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தலைமையாசிரியர்கள் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment