Thursday, 4 April 2013

மதுரையில் துணை நகரம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா



                           தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மதுரை நகரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா, மதுரை விமான நிலையத்திற்கு 586.86 ஏக்கர் நிலப்பரப்பில்
ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும். தோப்பூர், உச்சமபட்டி கிராமங்களை உள்ளடக்கி துணை நகரம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். முதல் கட்டமாக 3500 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு குடிசை மாற்றுவாரியத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment