Friday, 5 April 2013

ஆங்கில நுழைவு தேர்வில் மதுரை கல்லூரி மாணவி சாதனை



                    வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான, தேசிய அளவில் நடந்த ஆங்கில நுழைவுத் தேர்வில் (டோபல்), மதுரை மாணவி எம்.சிவகாமி வெற்றி பெற்றார். அமெரிக்கப் பல்கலையில், உதவித்தொகையுடன் மேற்படிப்பு (எம்.எஸ்.,)
படிப்பதற்கான, ஆங்கில நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தியா, சீனா, தைவான், கொரியாவில் இருந்து, தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேரில் ஒருவராக, மதுரை சிவகாமி தேர்வானார். இதுகுறித்து, மதுரை மனையியல் கல்லூரி முதல்வர், பானுமதி, கூறியதாவது: மதுரையில் பல்கலை மானியக் குழு தேர்வெழுதிய, 120 பேரில், நான்கு பேர் தான் தேர்ச்சி பெற்றனர். இதில் மூன்று பேர், எங்கள் மாணவிகள். அரசின் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணிக்கு, 29 பேரில், மாணவிகள் ஒன்பது பேர், தகுதி பெற்றனர். எட்டு பேர் பணி நியமனம் பெற்றனர். இவ்வாறு, பானுமதி கூறினார்.

No comments:

Post a Comment