Tuesday, 30 October 2012

கட்டாய கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளும் சேர்ப்பு : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?


இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் 
வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி


எல்லோருக்கும் நல்லவனாக இருக்க இறைவனால் கூட முடிவது இல்லை !

Nominal Roll Preparation - Declaration Form

பாடநூல் தயாரிப்பு குழு - புதிதாக சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய 10ஆம் வகுப்புக்கான சமூகவியல் முதல் பருவ பாடப்புத்தக செயல்பாடுகளுக்கான ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் பணிமனை 05.11.2012 அன்று சென்னையில் நடைபெறுவது குறித்த செயல்முறைகள்


ஆசிரியர்த் தகுதித் மறுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளி வைப்பு



     சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும்,

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்



வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ,

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் 01.01.2012 முதல் புதிய ஊதிய நிர்ணயப் பட்டியல்

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்



             அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி,

ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை



                    ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆவடி சத்தியமூர்த்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான், இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. "மேல்நிலை பாடப் பிரிவுகளுக்கு, ஒன்பது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, அரசு அறிவித்தது. இப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில் உள்ள மூன்று

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..


 பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள்

ஆசிரியர்த் தகுத் தேர்வு முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்


ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.