Thursday, 13 December 2012

ஆசிரியர் தேர்வில் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்



             ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய அரசு வகுத்துள்ள
விதிப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
                 பல மாநிலங்களில் 5 முதல் 10 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் அதேபோல வழங்கியிருந்தால், இந்த பிரிவுகளைச் சேர்ந்த பலருக்கும் ஆசிரியர்கள் பணி கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், ஆசிரியர் நியமனம் தொடர்பாக இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment