Tuesday, 11 December 2012

படித்த பட்டப்படிப்பு செல்லாது... மாணவியர் போராட்டம்



                              ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், காரைக்குடி, அழகப்பா அரசு கல்லூரி, திருப்பத்தூர், ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வழங்கிய, பி.., ஆங்கிலம் பட்டப் படிப்பு, டி.ஆர்.பி.,யால் ஏற்கப்படவில்லை. இதனால் மாணவியர், பல்கலை முன் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: "பி.., ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் தொழில்சார் கல்வியும் ஒன்று தான்' என, பல்கலை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை, டி.ஆர்.பி.,
அதிகாரிகள் நிராகரித்து, அரசு ஆணை கேட்கின்றனர். வேலை கிடைக்கும் வரை, தினமும் பல்கலைக்கு வருவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
                          பதிவாளர் மாணிக்கவாசகம் கூறுகையில், "உயர்கல்வி மன்றத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பரிந்துரை செய்து, இரு நாட்களுக்குள், மாநில உயர்கல்வி துறைக்கு அனுப்புவதாகவும், இந்த பாடத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறியுள்ளனர் ' என்றார்.

No comments:

Post a Comment