கல்வித்துறையில் உள்ள ஊழல்களை வெளிக்கொணர வேண்டிய தருணம் இது. கற்பித்தலில் ஆசிரியர்களுக்குள்ள சவால்களும் அதே நேரத்தில் கல்வி கண்காணிப்பில் உள்ள குறைபாடுகள் குறித்தும் விவதிக்கப்பட வேண்டும். உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு தொடக்கக் கல்வி அலுவலர்கள் இருப்பார்கள். ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்வதையும், பள்ளியின் கல்வித்தரதை ஆய்வு செய்வது என தொடக்கக் கல்வியை கண்காணிப்பில் பெரும் பங்காற்ற வேண்டியது இவர்களே. ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர பணப்பல்ன்கள் இவர்கள் மூலமே பெறப்படுகிறது.உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான சவால்கள்
இவர்களது அலுவலகத்தில் போதுமான பணியாட்கள் இல்லாத்தால் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் பணப்பல்ன்கள் அனுமதிப்பது புள்ளி விவரங்களை திரட்டுவது போன்ற பணிகளை ஆசிரியர்களை வைத்தே செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களிடம் நீக்கு போக்குடன் நடந்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களில் சொற்பமானவர்களைத் தவிர மற்றவர்கள் பள்ளி பார்வையின் போது குறைகள் இருந்தால் அதை “பணமாக்கும்” வித்தையில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பள்ளியில் உள்ள குறைகளுக்கேற்ப பணத்தின் அளவு மாறும்.
மேலும் ஆசிரியர்கள் பணப்பல்ன்கள் பெரும் போதும் ஆய்வின் போதும் ஆசிரியர்களிடம் கணிசமான தொகையை கறந்து விடுகிறார்கள். இத்தகைய பண விளையாடல்கள் தொடக்கக கல்வியின் அடிப்படையே ஆட்டத்திற்கு பெரும் பங்காற்றுகிறது.
No comments:
Post a Comment