Wednesday, 20 March 2013

பிட் அடித்த மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது



              10ம் வகுப்பு தேர்வில், "பிட்" அடித்த, 1,600 மாணவர்கள், கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள், தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு, "பிட்" அடிப்பதற்கு உதவியதாக, மாணவர்களின் பெற்றோர், 100 பேர் கைது செய்யப்பட்டனர். பீகார் மாநில, பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பீகார் மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், அதிகமான மாணவர்கள், "பிட்" அடிப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, "பிட்" மாணவர்களை பிடிப்பதற்காக, அதிரடிப்படை அமைக்கப்பட்டது.அதிரடிப் படையினர், கடந்த சில நாட்களாக, தேர்வு மையங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், "பிட்" அடித்த, 1,600 மாணவர்கள், சிக்கினர். இவர்கள், தொடர்ந்து தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள், "பிட்" அடிக்க உதவியதாக, அவர்களின் பெற்றோர், 100 பேர், கைது செய்யப்பட்டனர். பாட்னா உட்பட, மேலும் மூன்று மாவட்டங்களில் தான், அதிகமான முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து, அங்கு கண்காணிப்பும், சோதனையும், அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment