Tuesday, 25 June 2013

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி சித்தமருத்துவர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு ஜூலை 10, 11–ந்தேதிகளில் நேர்காணல் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டாளர்வி.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உதவி மருத்துவ அலுவலர்(சித்தமருத்துவம்) பதவிக்கான 83 
காலிப்பணியிடத்திற்கான தேர்வுகடந்த ஜனவரி மாதம் 6ந்தேதி நடத்தப்பட்டது. தேர்வில்விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் பிறவிதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 172 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் பதிவெண்கள் இணையதளத்தில் www.tnpsc.gov.inவெளியிடப்பட்டுள்ளன. நேர்காணல் தேர்வு அடுத்த மாதம் (ஜூலை )10மற்றும் 11 தேதிகளில் நடக்க உள்ளது. இவ்வாறு அந்தஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment