Thursday, 15 August 2013

வருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்



                  "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியும்,
(கல்லூரிக்கான இடத்தை சேர்க்காமல்)15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. இதில் 3 கோடி ரூபாய் மத்திய அரசும், 2 கோடி ரூபாய் மாநில அரசும் வழங்கும். மீதமுள்ள 10 கோடி ரூபாய் தனியார் அமைப்பு வழங்க வேண்டும். கல்லூரிக்கான இடத்தை தனியார் அமைப்பு உருவாக்கி தர வேண்டும். மாநில அரசுகளும் குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கி தரவேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அட்மிஷன், அந்தந்த மாநில விதிமுறைகளின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment