Thursday 28 February 2013

விடைத்தாள் திருத்தும் கட்டணம் அதிகரிப்பு



           கல்லூரி ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் கட்டணத்தை அதிகரிக்க தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்சி. உள்ளிட்ட இளநிலைப் பட்டப்படிப்பு விடைத்தாள் ஒன்றை திருத்துவதற்கான ஊதியம் ரூ.9-லிருந்து ரூ.12 ஆக அதிகரிக்கப்படுகிறது. எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப்
பட்டப்படிப்பு விடைத்தாளைத் திருத்துவதற்கான ஊதியம் ரூ.12-லிருந்து ரூ.15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு வரும் ஏப்ரல் முதல் உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடர்பான பிற பணிகளுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வி மன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கவும், இந்தக் கட்டண உயர்வை வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துவது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
              இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர்களுடன் ஆலோசிக்க வேண்டும்: அரசாணையின்படி, 2011 ஆம் ஆண்டிலேயே தேர்வுப் பணிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களை மட்டும் அழைத்து கட்டண உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வுக் கட்டண உயர்வு தொடர்பாக ஆசிரியர் அமைப்புகளுடன் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கே.பாண்டியன் கூறினார்
.

No comments:

Post a Comment